pracnet
உலகம்செய்திகள்

மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு!

Share

மகப்பேற்று விடுப்பு ஓராண்டாக அறிவிப்பு!

அரச பெண் ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக உயர்நீதிமன்றம் அரசாணை பிறப்பிப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேற்று விடுப்பு வழங்கப்படுகிறது.

அவர்களுக்கான மகப்பேற்று விடுமுறை 9 மாதங்களில் இருந்து தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக அதாவது 270 நாள்களாக உயர்த்தப்பட்டது.

மேலும் தற்போது இந்த விடுப்பு பிரசவத்துக்கு முன், பின் என பிரித்து எடுத்துக்கொள்ளவும், விடுப்பு காலத்துக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் 12 மாதங்களாக உயர்த்தப்படுகிறது எனவும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால் 365 நாள்கள் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போர்ட் சிட்டி கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் சடலமாக மீட்பு: இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் மர்ம மரணம்!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொழும்பு போர்ட் சிட்டி கடற்கரைப்...

09 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை முறை மாற்றம்: நிரந்தர பாதுகாப்பு இனி இல்லை!

பிரித்தானியாவில் புகலிடம் கோருபவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இனி நிரந்தரமானது அல்ல என்று உள்துறைச் செயலர் ஷபானா...

08 1
செய்திகள்உலகம்

ஈரான் – இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடுவதாக ஜோர்டான் அதிரடி அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜோர்டான் அரசு...

07 1
செய்திகள்உலகம்

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு – போர் உச்சக்கட்டம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ மற்றும் அணுசக்தித் தளங்களை இலக்கு...