வெளிநாடொன்றில் இஸ்ரேல் தூதர் மீது தாக்குதல்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல்கள் உலகை பரபரப்படையச் செய்துள்ள நிலையில், சீனாவில், இஸ்ரேல் தூதர் ஒருவர் தாக்கப்பட்ட விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில், இஸ்ரேல் தூதரக அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கான காரணம் குறித்து தாங்கள் விசாரித்துவருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.