ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது தொடக்கம் அந்த நாடு பாரிய மனிதாபிமானப் பிரச்சினை மற்றும் தற்போது உணவு மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் இருப்பதாக உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“அதிகரிக்கும் கடன் மற்றும் உணவுப் பிரச்சினை பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். சர்வதேச உதவி மாத்திரமே ஒரே தீர்வாக அமையும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதிய முதலீடுகள் இல்லாதது நாட்டில் பொருளாதார பிரச்சினை அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகளை மேற்கோள்காட்டி கூறப்பட்டுள்ளது.
#world
Leave a comment