rtjy 273 scaled
உலகம்செய்திகள்

கூகுள் பயனாளர்களுக்கு விசேட அறிவித்தல்

Share

கூகுள் பயனாளர்களுக்கு விசேட அறிவித்தல்

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கும் பணியை கூகுள் நிறுவனம் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கூகுள் நிறுவனம் கடந்த மே மாதம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

கூகுளின் மேம்படுத்தப்பட்ட பயனர்கள் கணக்குகள் கொள்கையின்படி, 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என்று அறிவித்தது.

பயன்பாட்டில் அல்லாத, செயலற்ற நிலையில் உள்ள கணக்குகள், பயனர்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள அல்லது கடவுச்சொல் மறந்த கூகுள் கணக்குகள், சைபர் கிரைம் குற்றங்கள் உள்ளிட்ட தவறான முறையில் கையாளப்பட வாய்ப்புள்ளதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளதாகவும், ஆகவே கூகுள் பயனர்கள் இந்த வார இறுதிக்குள் தங்கள் கணக்குகளில் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை அளித்து உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...