24 664f185bae216
உலகம்செய்திகள்

ஆன்டிலியாவை விட 4 மடங்கு பெரிய அரண்மனை! ரூ.20,000 கோடி மதிப்புள்ள பரோடா அரச குடும்பம் பற்றி தெரியுமா?

Share

ஆன்டிலியாவை விட 4 மடங்கு பெரிய அரண்மனை! ரூ.20,000 கோடி மதிப்புள்ள பரோடா அரச குடும்பம் பற்றி தெரியுமா?

இந்திய செல்வந்தர் முகேஷ் அம்பானியின் அன்டிலியா பங்களாவை விட மிகப் பிரம்மாண்டமான அரண்மனையை பரோடா அரச குடும்பம் வைத்துள்ளது.

முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டாலும், இந்தியாவில் அதை விட மிகப் பெரிய இல்லம் ஒன்று உள்ளது.

அதுதான் பரோடா அரச குடும்பத்தின் லக்ஷ்மி விலாஸ் அரண்மனை. இது சுமார் 170 ஏக்கர் பரப்பளவில், 170 அறைகள் கொண்ட இந்த பிரமாண்டமான அரண்மனை, ரூ.24,000 கோடி மதிப்புடையது மற்றும் லண்டனின் பக்கிங்காம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது!

லக்ஷ்மி விலாஸ் அரண்மனை, கெய்க்வாட் குடும்பத்தின் பிரமாண்டத்திற்கு சான்றாக திகழ்கிறது.

1880 களில் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட்-ஆல் வெறும் 18,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் செலவில் கட்டப்பட்டது.

இது தற்போது உலகின் மிகப்பெரிய தனிப்பட்ட இல்லமாகும்.

2012 ஆம் ஆண்டு தனது தந்தை ரஞ்சித்சிங் பிரதாப் சிங் கெய்க்வாட் இறந்த பிறகு ராஜகுமாரர் சமர்ஜித் சிங் கெய்க்வாட் அரியணை ஏறினார்.

இவர் 2002 ஆம் ஆண்டு முதல் வாங்கனேர் இராச்சியத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் ராதிகா ராஜே என்பவரை மணந்திருக்கிறார்.

சமர்ஜித் சிங் மற்றும் ராதிகா ராஜே தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெய்க்வாட் குடும்பத்தின் செல்வம் அவர்களின் அரண்மனைக்கு அப்பால் நீண்டுள்ளது. குஜராத் மற்றும் பனாரஸில் உள்ள 17 கண்கவர் கோவில்களை நிர்வகிக்கும் கோவில் அறக்கட்டளையின் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.

1934 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் 1948 பென்ட்லி மார்க் VI போன்ற பிரமாண்டமான கார்களுடன், உலகின் முதல் கார் கண்டுபிடிப்பாளர் கார்ல் பென்ஸ் உருவாக்கிய 1886 பென்ஸ் பேட்டண்ட் மோட்டார்வேகன் போன்ற அரிய கார்களின் தொகுப்பையும் அவர்கள் கொண்டுள்ளனர்.

ரூ.20,000 கோடி மதிப்புள்ள பரோடா அரச குடும்பத்தின் கதை, பரம்பரைச் சொத்துக்கள், பிரமாண்டமான சொத்துகள் மற்றும் வெற்றிகரமான வியாபார முயற்சிகள் ஆகியவை தொடர்கிறது.

இந்தியாவின் செழுமையான அரச பாரம்பரியத்தின் சின்னமாக அவர்கள் இன்றும் திகழ்கின்றனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...