99 வயதில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்திய மூதாட்டி
இந்தியாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர் 99 வயதில் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தைபாய் என்ற 99 வயது பெண்ணுக்கே இவ்வாறு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருவதோடு அவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்து கிடக்கின்ற நிலையில் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை சேவைகள் துறை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வயது என்பது வெறும் எண் என்று சொல்கிறார்கள்.
அதை உண்மையாக்கும் வகையில் எங்கள் ஆர்லாண்டோ அலுவலகத்தில் புதிய அமெரிக்க குடிமகனாக மாறிய 99 வயதான இந்தியாவைச் சேர்ந்த தைபாய் உள்ளார்.
அவர் உற்சாகமாக இருந்தார். அவர் தனது மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.