தமிழக வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயற்பட்டுவரும் நிலையில்‚ அவருக்கு தற்காலிக ஜனாதிபதி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதற்கமைய 85 நிமிடங்களுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் செயற்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனையின் காரணமாக, அதாவது கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கமலா ஹாரிஸிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.
தீவிர மருத்துவ பரி சோதனையின் பின்னர் ஜனாதிபதி ஜோ பைடனின் உடல் நிலை சிறப்பாக தேறியுள்ளதாக அவரது மருத்துவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#World
Leave a comment