ஜேர்மனியில் 5 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தலைநகர் பெர்லினுக்கு தெற்கே உள்ள Koenigs Wusterhausen நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் அயலவர்கள் தகவல் கொடுத்ததன் அடிப்படையில், பொலிஸார் அந்த வீட்டுக்கு சோதனை செய்ய முற்பட்டபோது, வீட்டுக்குள் 3 குழந்தைகள் உட்பட மொத்த 5 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலங்களைக் கண்ட பொலிஸார், பலியான அனைவரும் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#WordNews
Leave a comment