rtjy 367 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்காவுக்குள் நுழைந்த 42,000 இந்தியர்கள்

Share

அமெரிக்காவுக்குள் நுழைந்த 42,000 இந்தியர்கள்

அமெரிக்காவில் கடந்த ஓராண்டில் மட்டும் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோத நுழைவு தொடர்பாக பிரபல அமெரிக்க பத்திரிகை நிறுவன தரவுச் செய்தியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தரவுகளின்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில், பெரும்பாலானோர் புகலிடம் தேடி அமெரிக்காவுக்கு வருவதாகவும், சிலர் இதற்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து வேலை செய்து வருவோரின் தூண்டுதலின்பேரில் அதேபோன்று நுழைந்து வேலைவாய்ப்புகளைப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லையைக் கடந்து நுழைய வெளிநாட்டுப் பயண முகவர்களும், போதைப்பொருள் கடத்துபவர்களும் குறிப்பிட்டத் தொகையை பெற்றுக்கொண்டு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

மேலும், 2023 அக்டோபர் மாதம் வரையில் சர்வதேச அளவில் எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக நுழைந்ததாக 2 மில்லியன் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
anura 3
செய்திகள்இலங்கை

இலங்கை முழுவதும் அவசரகால நிலை தொடர்ந்தும் நீடிப்பு: ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் மற்றும் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட...

52e545af 47a4 4384 9d9a 6528a8375208 w1080 h608 s
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெகிழ்ச்சியூட்டும் மனிதாபிமானம்: நாட்டின் மறுசீரமைப்புக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர்கள்!

நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கி, ஹட்டன் – பொகவந்தலாவை,...

MediaFile 3 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் தீவிர சோதனை – மின்னஞ்சல் மூலம் மிரட்டல்!

தோஹாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றில் குண்டு இருப்பதாகக் கிடைத்த மிரட்டலைத்...

581302 254555061350701 1855013973 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை: மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடிப்படை மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ்....