MediaFile 3 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் தீவிர சோதனை – மின்னஞ்சல் மூலம் மிரட்டல்!

Share

தோஹாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றில் குண்டு இருப்பதாகக் கிடைத்த மிரட்டலைத் தொடர்ந்து, இன்று (28) காலை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தோஹாவிலிருந்து 245 பயணிகளுடன் இன்று காலை 8.27 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைந்த விமானம். குறித்த விமானத்திற்குள் நால்வர் வெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தத் தயாராக இருப்பதாக விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்குச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் அது உடனடியாகப் பாதுகாப்பு முனையத்திற்கு (Isolation Bay) கொண்டு செல்லப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், பொலிஸ் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் விமானத்தைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னர், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, இது ஒரு போலி மிரட்டல் என உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் குறித்த விமானம் பிற்பகல் 1.07 மணிக்கு மீண்டும் தோஹா நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

கடந்த 26 ஆம் திகதி கண்டி மாவட்ட செயலகத்திற்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டலைப் போன்றே இதுவும் ஒரு திட்டமிட்ட போலி மிரட்டல் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த இரண்டு மிரட்டல் மின்னஞ்சல்களும் வெளிநாடொன்றிலிருந்து அனுப்பப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் இவ்வாறான சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...