படகு விபத்தில் மாணவர்கள் உட்பட 29 பேர் சாவடைந்துள்ளனர்.
நைஜீரியாவின் கெனோ மாநிலத்தின், வடரி ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் சாவடைந்துள்ளானார்.
படாவ் கிராமத்தில் இருந்து பாக்வாய் நகருக்கு 50க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சாவடைந்தவர்களில் பெரும்பாலானோர் மத நிகழ்வொன்றுக்குச் சென்ற, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அத்தோடு விபத்துக்குள்ளான படகில் சுமார் 40 மாணவர்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர்த்தப்பிய 7 பேரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அதிக சுமை மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக இந்த விபத்துக்கு நடந்திருக்கலாமென மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
#world
Leave a comment