2 8 scaled
உலகம்செய்திகள்

1 நிமிடத்திற்கு அடுத்தடுத்து 25 ராக்கெட் குண்டுகள்: இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்

Share

1 நிமிடத்திற்கு அடுத்தடுத்து 25 ராக்கெட் குண்டுகள்: இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல்

வடக்கு இஸ்ரேல் பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு இஸ்ரேலிய பகுதி மீது லெபனான் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளது.

ஒரு நிமிடத்திற்குள் சுமார் 25 ராக்கெட் குண்டுகளை வடக்கு இஸ்ரேலிய பகுதிகள் மீது லெபனான் வீசியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேலும் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் சாசா மற்றும் ஸ்தூலா குடியிருப்புகள் மீது விழுந்ததாகவும், தெற்கு லெபனானின் ஹெஸ்பொல்லா தளங்களில் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த தாக்குதலை லெபனான் செய்து இருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், இந்த தாக்குதல் தொடரும் என லெபனான் எச்சரிக்கை விடுத்து இருப்பதாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...