அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்திலேயே இந்த கால்தடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ் அகழ்வுப் பணிகளை தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த ஆராய்ச்சியில் புதை படிவ காலடி தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் காலடி தடங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த காலடி தடங்கள் சுமார் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் நடமாடுவதை சுற்றிக் காட்டுகின்றன என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் முறையாக வெள்ளை மணல் தேசிய பூங்காவில் உள்ள ஒரு வறண்ட ஏரி படுக்கையில் இம்மாதிரியான காலடி தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் எப்போது அமெரிக்காவுக்கு வந்தனர் என்பதையும் கண்டுபிடிக்க இக் கண்டுபிடிப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதை படிவ காலடி தடங்களை பாதுகாப்பதற்கு ஒரே வழி அதனை புகைப்படங்களாக எடுத்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தெளிவாக்குவதே ஆகும் என தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Leave a comment