6 28
உலகம்செய்திகள்

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

Share

இந்தியாவில் பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் கைது

இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற பெண் உள்ளிட்ட நான்கு இலங்கை தமிழர்கள் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முற்ப்ட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு வந்த 310 இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியின் போது கையில் பயண பேக்குகளுடன் நின்று கொண்டிருந்த நான்கு இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நால்வரும், மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் (எ) ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ்( 68) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தயடுத்து கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தங்கச்சிமடம் காவல்துறையினர் நால்வரையும் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நான்கு பேரையும் கைது செய்த தங்கச்சிமடம் காவல்துறையினர், இவர்களுக்கு படகு மூலம் அழைத்துச் செல்ல முயன்றவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 5 2
இலங்கைசெய்திகள்

அறுகம்பே பாலியல் அத்துமீறல் முயற்சி: சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவி கோரல் – பொலிஸ் இலக்கங்கள் அறிவிப்பு!

கடந்த ஒக்டோபர் 25ஆம் திகதி அறுகம்பே பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட...

images 17
செய்திகள்இலங்கை

கந்தானையில் பரபரப்பு: திருடிய லொறியுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரால் அடுத்தடுத்து இரண்டு விபத்துக்கள் – ஒருவர் பலி, 4 பேர் காயம்!

கந்தானைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியா வீதிப் பிரதேசத்தில் நேற்று (நவ 15) இரவு, திருடப்பட்ட லொறி...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதல்: ஒரு படகு மூழ்கியது – மீனவர் வைத்தியசாலையில்!

மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (நவ 15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற...

grads
செய்திகள்இலங்கை

கல்வி, உயர் கல்வி அமைச்சின் வட்டி இல்லாத மாணவர் கடன்: 131 பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் – நவம்பர் 30 கடைசித் திகதி!

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின்...