உலகம்
2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்
2019ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஒலிக்கத் துவங்கிய நாட்ரிடாம் தேவாலய மணிகள்
பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிந்தபின், தேவாலய மறுசீரமைப்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன.
2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி, பிரான்சிலுள்ள புகழ்பெற்ற நாட்ரிடாம் தேவாலயம் தீப்பற்றி எரிவதைக் கண்டு, பாரீஸ் நகர மக்களுடன், அந்த பயங்கரக் காட்சியை தொலைக்காட்சியில் கண்ட உலகமும் பதறியது.
தீப்பற்றி எரிந்த தேவாலயத்தை ஐந்து ஆண்டுகளில், மீண்டும் முன்னை விட அழகாக கட்டி எழுப்புவதாக உறுதியளித்திருந்தார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
தற்போது நாட்ரிடாம் தேவாலயப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று தேவாலய மணிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒலிக்கச் செய்யப்பட்டன.
அடுத்த மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தேவாலயம் பொதுமக்கள் பயன்பட்டுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, தேவாலய மணிகள் ஒலிப்பதைக் கேட்டு மக்கள் ஆனந்தமடைந்தார்கள்.
தீப்பிடித்த தேவாலயத்தை மறுசீரமைக்க சுமார் 250 நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான நிபுணர்கள் இணைந்து பணியாற்றியதுடன், பல மில்லியன் யூரோக்களும் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.