12 14
உலகம்செய்திகள்

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம்

Share

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம்

கிரகங்களுக்கு இடையேயான ஆய்வுகளுக்காக இதுவரை உருவாக்கப்பட்ட விண்கலங்களில் மிகப்பெரியதான நாசாவின் யூரோபா கிளிப்பர் (Europa Clipper) விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விண்கலமானது, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவை ஆராய்வதற்காக கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

யூரோபா கிளிப்பரினால், ஈர்ப்பு உதவிகளை பயன்படுத்தி 1.8 பில்லியன் மைல்கள் பயணிக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2030ஆம் ஆண்டில், வியாழனை அடைந்த பிறகு, அது யூரோபாவில் வாழக்கூடிய நிலத்தடி கடலை பற்றி ஆராய தொடங்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐஸ் – ஊடுருவக்கூடிய ரேடார் மற்றும் வெப்ப இமேஜிங் உள்ளிட்ட அதி நவீன கருவிகளுடன் பொருத்தப்பட்ட இந்த விண்கலம், நமது சூரிய குடும்பத்திலும் அதற்கு அப்பாலும் வாழும் தன்மை பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை, வியாழன் கிரகத்தின் சந்திரனான யூரோபாவில் உயிர்கள் வாழ முடியுமா என்பதைக் கண்டறிவதும் யூரோபா விண்கலத்தின் நோக்கமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...