உலகம்
இஸ்ரேல் இராணுவம் காசாவிலுள்ள பாடசாலை மீது திடீர் வான்வழித் தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் காசாவிலுள்ள பாடசாலை மீது திடீர் வான்வழித் தாக்குதல்
காசாவில்(Gaza) உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட திடீர் வான்வழித் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று (16.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாக்குதல் நடத்தப்பட்ட பாடசாலை, அகதிகள் தங்க வைக்கப்பட்ட ஐ.நா. அமைப்பிற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
கடந்த 15 நாட்களில் நடந்த மூன்றாவது தாக்குதல் இதுவென்பதோடு, காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் வைத்தியசாலை காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் தான் கான் யூனிஸை காலி செய்யும்படி பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து அங்குள்ள மூன்று பெரிய மருத்துவமனைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் ஐக்கிய நாடுகள் சபை (UN) இது ஒரு ஆபத்தான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது.
மேலும், கான் யூனிஸில் இருந்து மக்களை வெளியேற்ற கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.