செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

Share

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான போலி துருக்கிய கடவுச்சீட்டினை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஜே.கே. பாய், செவ்வந்தியை போல தோற்றமளிக்கும் தக்ஷி என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு அழைத்து வந்து மற்றொரு போலி கடவுச்சீட்டினை தயாரித்ததாகவும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்ஷி என்ற பெண் இஷாரா செவ்வந்தியை போலவே இருந்ததால், அவர் நேபாளத்திற்கு அழைத்து வரப்பட்டு, தனது கடவுச்சீட்டினை பயன்படுத்தி மற்றொரு போலி கடவுச்சீட்டினை உருவாக்கி, துருக்கிக்குச் சென்று பின்னர் மலேசியாவுக்குச் சென்றதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இஷாரா செவ்வந்தி ஜே.கே. பாய் மற்றும் சிலோன் பாயுடன் நேபாளத்தில் ஒரே அறையில் சுமார் ஒரு மாதமாக தங்கியிருந்ததாகவும், பின்னர் அவர் வேறொரு அடுக்குமாடி கட்டடத்தில் ஒரு அறைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, நேபாளத்தின் காத்மாண்டுவில் பதுங்கியிருந்த இஷாரா செவ்வந்தி, ஜே.கே.பாய், யாழ்ப்பாண சுரேஷ், தக்ஷி, கம்பஹா பாபா மற்றும் நுகேகொட பபி ஆகியோர் செப்டெம்பர் 13 திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...