உலகம்
இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்
இஸ்ரேல் மீது பாய்ந்த 200 ஏவுகணைகள்: ஹிஸ்புல்லா குழு நடத்திய திடீர் தாக்குதல்
இஸ்ரேலின் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா போராளிக் குழு ஏவி சரமாரி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போராளிக் குழு இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ட்ரோன் தாக்குதலை பயன்படுத்தி 10 இஸ்ரேலிய ராணுவ தளங்களை அழித்து இருப்பதாகவும் ஹிஸ்புல்லா போராளிக் குழு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலானது ஹிஸ்புல்லா போராளிக் குழுவின் மூத்த தளபதிகளில் ஒருவரை இஸ்ரேல் கொலை செய்ததை தொடர்ந்து இது பதிலடியாக நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் சந்தேகத்திற்கு இடமான வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்த தகவலில், ஏவுகணை தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கு இடையே கடந்த சில தினங்களாக எல்லைப் பிரச்சினை நிலவி வருவது கவனிக்கத்தக்கது.