உலகம்
தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு
தெற்கு இங்கிலாந்தில் 132 வெள்ள எச்சரிக்கை..ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிப்பு
பிரித்தானியாவில் சமீபத்திய நாட்களில் பெய்த கனமழையால் ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டன.
சனிக்கிழமையன்று பெய்த கனமழையினால், பிரித்தானியாவின் Worcestershire கவுண்டி கிரிக்கெட் கிளப்பின் மைதானம் தண்ணீரில் மூழ்கியது.
அதேபோல் எடின்பர்க் அருகே உள்ள Musselburgh ரேஸ்கோர்ஸ் குதிரைப் பந்தய மைதானத்திலும் தண்ணீர் சூழ்ந்தது.
கனமழை காரணமாக ஈஸ்டர் நிகழ்வுகள் பாதிக்கப்பட்ட நிலையில், Wiltshire மற்றும் Gloucestershire பகுதிகளில் 17 வெள்ள எச்சரிக்கைகளை சுற்றுச்சூழல் நிறுவனம் வெளியிட்டது.
மேலும், தெற்கு இங்கிலாந்து முழுவதும் 132 வெள்ள எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. அதாவது, இங்கிலாந்து முழுவதும் பல நாட்கள் பெய்த கனமழைக்குப் பிறகு அந்த பகுதிகளில் வெள்ளம் சாத்தியம் ஆகும்.
திங்கட்கிழமை அதிகாலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பலத்த மழை பெய்து நாள் முழுவதும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் கிரேக் ஸ்னெல் கூறுகையில், திங்கட்கிழமை நிச்சயமாக சில இடங்களில் மிகவும் ஈரப்பதமாக இருக்கும்.
Yorkshire-யில் இருந்து தெற்கே மிக மோசமான மழை உணரப்படும் மற்றும் வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டுமா என்பதை வானிலை அலுவலகம் கவனித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.