உலகம்செய்திகள்

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

Share
24 6607bb530f3ae
Share

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் (Daniel Balaji) கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (29.3.2024) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

தான் இறந்தாலும், தனது கண்கள் மூலம் இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் டேனியல் பாலாஜி. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அங்கு வந்து கண்களை தானமாகப் பெற்றனர்.

இதையடுத்து “உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார்” என்று டேனியல் பாலாஜி குறித்து அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...