மகனுக்காக ரூ.640 கோடி செலவழித்து துபாயில் வீடு வாங்கிய அம்பானி
உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு துபாயில் இருக்கும் வீட்டினை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார் தெரியுமா?
அவ்வளவு கோடிகளில் இந்த வீட்டை வாங்குவதற்கான காரணம் என்ன எனவும் அந்த வீட்டில் உள்ள அம்சங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
உலகிலேயே ஆடம்பர வாழ்க்கை முறைக்கு பெயர் போன நாடு துபாய்.
ரஷ்யாவில் உள்ள பணக்காரர்கள் முதல் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் வரை அனைவரும் துபாயில் ஆடம்பரமான வீடுகளை வாங்கி வருகின்றார்கள்.
அந்தவகையில் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் சேர்ந்து துபாயில் வீடு ஒன்றை வாங்கியிருந்தார்.
துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.
இந்த வீட்டை தனது இளைய மகனான அதாவது புதிய கல்யாண மாப்பிள்ளையான ஆனந்த் அம்பானிக்காக வாங்கியுள்ளார்.
இந்த வீடானது பாம் ஜுமேரா செயற்கை தீவில் அமைந்துள்ளது.
இந்த மாளிகையில் மொத்தம் பத்து படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் உள்ளன.
ஆடம்பரமான வில்லா இத்தாலிய பளிங்கு மற்றும் அழகான அதிநவீன தலைசிறந்த படைப்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாளிகையானது 26,033 சதுர அடி பரப்பளவில் காணப்படுகிறது.
வீட்டில் 70 மீட்டர் தொலைவில் கடற்கரைக்கு செல்லலாம்.
இதனுடன், இரண்டு மாடி மாளிகையில் ஏழு ஸ்பா வசதிகள், உட்புற சலூன் மற்றும் பார் உள்ளது.
இதற்காக அவர் 80 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய் செலவழித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த வீட்டின் அருகில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் வீடு, பிரிட்டிஷ் கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.