உலகம்
நாய்களை வளர்க்க கூடாது! ஆனால் இறைச்சி உண்ணலாம் – அதிரடி தடை விதித்த நாடு
நாய்களை வளர்க்க கூடாது! ஆனால் இறைச்சி உண்ணலாம் – அதிரடி தடை விதித்த நாடு
வட கொரியாவில் நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியர்கள் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்க்க, வைத்திருக்க பியோங்யாங் (Pyongyang) தடை விதித்து ஆணையிட்டுள்ளது.
ஆனால், இறைச்சி மற்றும் ரோமத்திற்காக நாய்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகருக்கு வடக்கே அமைந்துள்ள தெற்கு பியோங்கன் மாகாணத்தின் ஆதாரத்தின்படி, கொரியாவின் சோசலிஸ்ட் பெண்கள் ஒன்றியம் மூலம் இந்த வினோதமான தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், ‘நாயை குடும்பத்தில் ஒருவராக நடத்துபவர்கள், அதனுடன் குடும்பமாக உண்பது மற்றும் உறங்குவது சோசலிச வாழ்க்கை முறைக்கு ஒத்துவராது. எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்’ என தெரிவித்தனர்.
அதேபோல் நாய்களுக்கு ஆடைகளை அணிவிப்பதும், மனிதர்களைப் போல் அலங்காரம் செய்வதும், போர்வை போர்த்தி இறந்தவுடன் புதைக்கும் பழக்கம் முதலாளித்துவ செயல் என்றும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என ஒரு ஆதாரம் கூறுகிறது.
வட கொரியா மற்றும் தென் கொரியா என இரு தேசங்களிலும் நாய் இறைச்சி உண்ணப்படுகிறது. ஆனால்,தென் கொரியாவில் அது சர்ச்சையாக மாறியதால், அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்யும் சட்டத்தை சியோல் அரசாங்கம் சனவரி மாதம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.