2025க்குள் 10 மில்லியன் ஹியூமனாய்டு ரோபோக்கள்: சீனாவின் எதிர்கால கனவு இதுதான்!
2025க்குள் ஹியூமனாய்ட் ரோபோக்களை பெருவாரியாக உற்பத்தி செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.
மனித வடிவ ரோபோட் (Humanoid Robot) துறையில் முன்னோடியாக இருப்பதற்கான திட்டவட்டமான திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.
அந்த வகையில், தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MIIT) 2025ஆம் ஆண்டுக்குள் ஹியூமனாய்டு ரோபோக்கள் உருவாக்கம் மற்றும் பெருமளவு உற்பத்தி செய்வதற்கான செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் நாட்டில் 10,000 ஊழியர்களுக்கு 500 மனித வடிவிலான ரோபோக்கள் இருக்க வேண்டும், அதாவது 10 மில்லியன் ரோபோக்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் போலவே, ஹியூமனாய்டு ரோபோக்களும் தொழில்துறைகளையும் நம் வாழ்க்கை முறையையும் புரட்சிகரமாக மாற்றும் என்று MIIT கணித்துள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள் இந்த ரோபோக்கள் “முன்னேறிய நிலையை” அடைய வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோட் தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உற்பத்தித் துறையையும், மனித வாழ்க்கையையும் முற்றிலும் மாற்றும் என்று சீனாவின் அமைச்சகம் கூறுகிறது.
2027 ஆம் ஆண்டுக்குள் குறிப்பாக ஹியூமனாய்டு ரோபோட் உற்பத்திக்கான வலுவான விநியோக சங்கிலியை (supply chain)செய்யவும், சீனாவின் பொருளாதாரத்தில் மனித உருவங்கள் கொண்ட ரோபோக்களின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் சீன அமைச்சகம் நோக்கம் கொண்டுள்ளனர்.
- 2025க்குள் 10 மில்லியன் ஹியூமனாய்டு ரோபோக்கள்: சீனாவின் எதிர்கால கனவு இதுதான்! China humanoid robot mass production
- Artificial Intelligence
- artificial intelligence humanoid robot
- china
- China robot plan 2025
- Government of China
- Humanoid robot applications
- MIIT China robotics development
- Ministry of Industry and Information Technology (MIIT) China
- Tesla humanoid robot
Comments are closed.