உலகம்
உயிருடன் கொடூர சித்திரவதை: ஹமாஸ் தலைவர் பற்றிய ரகசிய நாட்குறிப்பு
உயிருடன் கொடூர சித்திரவதை: ஹமாஸ் தலைவர் பற்றிய ரகசிய நாட்குறிப்பு
ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் தமது எதிர் தரப்பினரை காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளதாக, ரகசிய நாட்குறிப்பில் இருந்து அம்பலமாகியுள்ளது.
தங்களிடம் சிக்கும் எதிர் தரப்பினரை உயிருடன் காகிரீட்டில் புதைப்பது உள்ளிட்ட கொடூரங்களிலும் ஹமாஸ் படைகள் ஈடுபட்டுள்ளன. காஸா பகுதியில் தற்போது இஸ்ரேல் படைகள் கைப்பற்றியுள்ள ஹமாஸ் தலைமையகத்தில் இருந்தே யாஹ்யா சின்வார் தொடர்பிலான தரவுகள் சிக்கியுள்ளன.
யாஹ்யா சின்வார் தொடர்பிலான அந்த நாட்குறிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹ்மூத் இஸ்திவி எதிர்கொண்ட சித்திரவதை குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015ல் தன்பாலின ஈர்ப்பு விவகாரத்தில் ஹமாஸ் நிர்வாகத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் மஹ்மூத் இஸ்திவி சிக்கியிருந்தார்.
சுமார் ஓராண்டு காலம் ஹமாஸ் பிடியில் சிக்கியிருந்த மஹ்மூத் இஸ்திவி 400 முதல் 500 முறை கொடூர தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது. 5 நாட்கள் கண்கள் கட்டப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், யாஹ்யா சின்வார் பொதுவாக துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதற்கு பதிலாக தமது கைகளால் கொலை செய்ய விரும்புபவர் என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை இதை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார்.
2016ல் தமது நடத்தை சமூகத்திற்கு எதிரானது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நிலையில் மஹ்மூத் இஸ்திவி மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார். ஆனால் தற்போது வெளியான தரவுகளில், மஹ்மூத் இஸ்திவி தமது குற்றத்தை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார் என்றே தெரிய வந்துள்ளது.
1989ல் இஸ்ரேல் படைகளிடம் சிக்கிய யாஹ்யா சின்வார், தொடர்ச்சியாக 150 மணி நேரம் கொடூர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் ஆயுள் தண்டனைக்கும் விதிக்கப்பட்டார்.
ஆனால் இஸ்ரேல் நிர்வாகத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2011ல் யாஹ்யா சின்வார் விடுவிக்கப்பட்டார். அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார் என்றே அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அந்த திடீர் தாக்குதலில் 1200 பேர்கள் கொல்லப்பட்டனர். 253 பேர்கள் ஹமாஸ் படைகளால் கடத்தப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் இஸ்ரேல் முன்னெடுத்த கண்மூடித்தனமான தாக்குதலில், இதுவரை 31,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குடியிருப்புகள் உட்பட உள்கட்டமைபுகள் மொத்தமும் சேதமடைந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.