ஆயுதங்களுக்கு பதில் உணவு : வடகொரியா ரஷ்யா‘டீல்’அம்பலம்
வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும், அந்த ஆயுதங்களுக்கு ஈடாக வடகொரியாவுக்கு உணவு வழங்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
வடகொரியா தனது இராணுவத்திற்கு முன்னுரிமை அளிப்பதால் ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது. ஏராளமான ஆயுதங்கள் இருந்தபோதிலும், வட கொரியர்கள் உணவு நெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு ஈடாக வடகொரியாவுக்கு உணவு வழங்க ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை அமைப்புகள் கூறுகின்றன.
வடகொரியாவின் ‘தன்னிச்சையான’ ஏவுகணைத் திட்டத்தால், மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் உலக நாடுகளிடம் இருந்து வடகொரியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சிறப்புக் குழுவை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளார்.
வடகொரியாவும் ரஷ்யாவும் அண்டை நாடுகள். ரஷ்ய அதிபர் புதினும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் நெருங்கிய நண்பர்கள்.
Comments are closed.