6 2 scaled
உலகம்செய்திகள்

விஜயின் அரசியல் பயணத்தில் எப்போதும் துணை நிற்பேன்- பிரபல நடிகர் பகிரங்க அறிவிப்பு

Share

விஜயின் அரசியல் பயணத்தில் எப்போதும் துணை நிற்பேன்- பிரபல நடிகர் பகிரங்க அறிவிப்பு

நடிகர் விஜயின் அரசியல் பயணத்தில் அவருக்கு துணை நிற்பேன் என நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் திகதி தமிழக வெற்றி கழகம் என தனது கட்சி பெயரை அறிவித்தார்.

அவரது அரசியல் பயணத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், 2026 சட்டமன்ற தேர்தல் மட்டுமே இலக்கு என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், விஜயின் அரசியல் பயணத்தில் அவருக்கு துணை நிற்பேன் என நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

சமுத்திரக்கனி கூறியதாவது..,
“விஜய் அரசியலுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர் இப்போது தன்னுடைய கேரியரில் உச்சத்தில் இருக்கிறார். அதை விட்டு விலகி அரசியலுக்கு வருவதை பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன்.

அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவைப்பட்டால் அரசியல் பயணத்தில் அவருக்குத் துணை நிற்பேன். அவர் கூப்பிட வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இல்லை. நல்ல விஷயங்களுக்கு நான் எப்போதுமே கூட நிற்பேன்” என தெரிவித்தார்.

சமுத்திரக்கனி விஜய்க்கு துணை நிற்பேன் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...