UAE-ல் ஆலங்கட்டி மழை., மூடப்பட்ட துபாயின் முக்கிய அடையாளம்
துபாயின் முக்கிய அடையாளமான குளோபல் வில்லேஜ் மூடப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக துபாயின் முக்கிய அடையாளமான குளோபல் வில்லேஜ் (Global Village) இன்று ஒருநாள் (February 12) மூடப்படும் என சுற்றுலா மையம் அறிவித்துள்ளது.
குளோபல் வில்லேஜுக்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் என்ற சமூக ஊடகம் மூலம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளிலும் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.
“மோசமான வானிலை காரணமாக, எங்கள் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குளோபல் வில்லேஜ் இன்று மூடப்படும்.” தற்போதைய காலநிலை குறையும் பட்சத்தில் குளோபல் வில்லேஜ் நாளை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.