5 scaled
உலகம்செய்திகள்

குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

Share

குழந்தைகளை தூக்கி வீசி கொன்ற இளம் ஜோடி! மருந்து செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்

சீனாவில் தங்கள் 2 குழந்தைகளை மாடியில் இருந்து வீசி கொன்ற ஜோடிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த Zhang Bo என்ற நபர், தனது மனைவி சென் மெய்லினை 2020ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் அவர்களின் இரண்டு குழந்தைகளின் Zhang இடமே வளர்ந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில் தான் Ye Chengchen என்ற பெண்ணுடன் Zhang Boவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

தங்களின் உறவுக்கு குழந்தைகள் தடையாக இருப்பதாக நினைத்த Ye Chengchen, குழந்தைகளை கொல்ல வேண்டும் என Zhang Bo-யை கட்டாயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் வசித்த குடியிருப்பின் 15வது மாடியில் இருந்து சன்னல் வழியாக குழந்தைகளை தூக்கி வீசியுள்ளனர். இதில் இரு குழந்தைகளும் துடிதுடித்து இறந்துள்ளன.

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் Zhang Bo, Ye Chengchen கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இருவருக்கும், ஊசி வழியே மருந்து உட்செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சீனா மட்டுமன்றி உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...