துருக்கியை சென்றடையவுள்ள அமெரிக்க போர் விமானங்கள்
துருக்கிக்கு 23 டொலர் பில்லியன் மதிப்பிற்கு எஃப்-16 ரக இராணுவ போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இதில் 40 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களும், தற்போது துருக்கியிடம் உள்ள 79 எஃப்-16 விமானங்களை மேம்படுத்துவதற்கான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்கா தலைமையில் 31 உலக நாடுகள் ஒருமித்து உருவாக்கிய அமைப்பு நேட்டோ (NATO) எனும் வட அட்லான்டிக் கூட்டமைப்பு.
இக்கூட்டணியில் உள்ள ஒரு நாட்டின் மீது வேறொரு நாடு தாக்குதல் நடத்தினால், அது 31 நாடுகளையும் தாக்குவதற்கு சமமாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும்.
முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர், இரண்டிலும் சுவீடன் பங்கேற்கவில்லை.
பெரும்பாலான உலக நாடுகளின் போர்களிலும் சுவீடன் பங்கேற்காமல் நடுநிலை வகித்து வந்தது. இந்நிலையில், 2022ல் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா “சிறப்பு இராணுவ நடவடிக்கை” எனும் பெயரில் ஆக்கிரமித்தது.
இதைத் தொடர்ந்து நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பினராக சேர சுவீடன் முடிவெடுத்தது.
2022ல், பின்லாந்து (Finland) மற்றும் சுவீடன் ஆகியவை நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்த நிலையில், பின்லாந்தின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.
எனினும், துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான் (Viktor Orban) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சுவீடனின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சுவீடன் நேட்டோவில் அங்கத்தினராவதை துருக்கியும் ஆதரித்தது.
இதைத் தொடர்ந்து துருக்கிக்கு 23 டொலர் பில்லியன் மதிப்பிற்கு எஃப்-16 ரக இராணுவ போர் விமானங்களை தர முன்வந்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இதில் 40 புதிய எஃப்-16 ரக போர் விமானங்களும், தற்போது துருக்கியிடம் உள்ள 79 எஃப்-16 விமானங்களை மேம்படுத்துவதற்கான அதி நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், விமானங்களை வழங்குவதை விரைவாக செய்து முடிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.