tamilnaadi 10 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை!! வழக்குப்பதிவு செய்த நாடு

Share

காசாவில் இனப்படுகொலை செய்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கினை தென் ஆப்பிரிக்கா பதிவு செய்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் காசாவில் 21,500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா அளித்த விண்ணப்பத்தில், “காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலை தன்மை கொண்டவை, ஏனெனில் அவை பாலஸ்தீனிய தேசிய, இன மற்றும் இனக்குழுவின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கம் கொண்டவை’ என குறிப்பிட்டுள்ளது.

மேலும், “காசாவில் பாலஸ்தீனியர்களைக் கொல்வது, அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக கடுமையாக தீங்கு விளைவிப்பது மற்றும் அவர்களின் உடல் ரீதியான அழிவைக் கொண்டு வருவதற்கா கணக்கிடப்பட்ட வாழ்க்கை நிலைமைகளை அவர்கள் மீது சுமத்துவது ஆகியவை கேள்விக்குரிய செயல்களில் அடங்கும்’ எனவும் குறித்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் உறுப்பு நாடுகளான தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டுள்ளதோடு பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் கொள்கைகள் நிறவெறிக்கு சமம் என பல மனித உரிமை அமைப்புகள் சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...