உலகம்செய்திகள்

ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல்

Share
1597195 dgh
Share

ஹமாஸ் சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்பு: இஸ்ரேல் ராணுவம் தகவல்

காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்க குழியில் இருந்து 5 பிணைக் கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி காஸா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள 1,139 பேர் கொல்லப்பட்டனர்.மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பிணைக் கைதிகளாக காஸாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதனைத்தொடர்ந்து, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு திருப்பி கொடுப்பதாக நினைத்து நடைபெற்று வரும் போரில் இதுவரை 20,424 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எந்த நாடுகள் கூறினாலும், ஐ.நாவின் போர் நிறுத்த கோரிக்கைகளையும் கேட்காமல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது.

இதனிடையே, காஸாமுனையில் உள்ள பிணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுவித்தது.

இதனையடுத்து, பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுப்பட்டு வந்தது. இந்நிலையில், காஸாமுனையில் உள்ள 5 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதாவது, இடன் சிஷெர்யா, சிவ் டடூ, எலியொ டுலிடனொ, நிக் பெய்சர், ரொன் ஷெர்மென் ஆகிய 5 பேரை ஹமாஸ் பதுங்கு குழியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் பிணமாக மீட்டுள்ளனர். மேலும், இவர்களின் சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இஸ்ரோ ராணுவம் பகிர்ந்துள்ளது.

Share
Related Articles
2 11
இலங்கைசெய்திகள்

திருகோணமலையின் அனைத்து முடிவுகளிலும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை

திருகோணமலை மாவட்டத்துக்கான அனைத்து முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள்...

2 12
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன....

2 9
இலங்கைசெய்திகள்

மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்..

கொடபொல பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தறை – கொடபொல பிரதேச...

2 10
இலங்கைசெய்திகள்

புத்தளம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்…

புத்தளம் – வென்னப்புவ பிரதேச சபை நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் புத்தளம் –...