OIP 1
உலகம்செய்திகள்

ஹமாஸ் படையினருடன் தீவிர சண்டை: 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை

Share

ஹமாஸ் படையினருடன் தீவிர சண்டை: 8 இஸ்ரேலிய வீரர்கள் கொலை

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் 8 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் ஹமாஸ் போராளி படை குழுவினருக்கும் இடையிலான சண்டை காசாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் போராளி குழுவை முழுவதுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேலிய ராணுவ படை காசாவில் தரைவழி தாக்குதலை முன்னகர்த்தி வருகிறது.

இதில் டஜன் கணக்கான ஹமாஸ் போராளி குழுவினர் கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்றனர்.

அதே சமயம் ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய வீரர்களை ஆங்காங்கே தாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் காசாவில் தற்போது 8 இஸ்ரேலிய வீரர்கள் ஹமாஸ் படையினர் உடனான சண்டையின் போது கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கைப்படி இதுவரை 154 இஸ்ரேலிய வீரர்கள் அக்டோபர் 20ம் திகதி தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கிய பிறகு கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருந்து இதுவரை 480 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...