உலகம்
ஹமாஸ் அமைப்பினரால் பெண்களுக்கு நேர்ந்த கதி: இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் அமைப்பினரால் பெண்களுக்கு நேர்ந்த கதி: இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளை அடைத்து வைத்து இருந்த போதும் தங்கள் நாட்டு பெண்களை தகாத முறைக்கு உட்படுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது 5000 ஏவுகணைகளை வீசிய ஹமாஸ் அமைப்பினர் 1200 பேரை கொன்றதோடு 240 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
மேலும், அந்த தாக்குதலின் போது, இஸ்ரேலிய நகரங்களில் 300 பெண்கள் கொல்லப்பட்டதோடு ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற பெண் பிணையக் கைதிகளை தகாத முறைக்கு உட்படுத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் பெண் உரிமை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் எங்கே சென்றன என்று கேள்வி எழுப்பி உள்ள நெதன்யாகு, உலக நாடுகள், அமைப்புகள் இஸ்ரேலிய பெண்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண்களின் வாக்குமூலத்தை இஸ்ரேலிய பொலிஸார் காணொளியாக வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.