பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல்
இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக தெரிவித்து விரக்தியடைந்த இளைஞன் ஒருவர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே கத்திகுத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே நேற்று (02.12.2023) இரவு குறித்த நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸைச் சேர்ந்த 26 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கத்தி ஒன்றினை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானா தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக குறித்த இளைஞன் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் மன நல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.