உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் ரிஷி சுனக்

23 6545f142b25c4
Share

பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் ரிஷி சுனக்

பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை சீர்குலைக்க வேண்டாம் என பாலஸ்தீன ஆதரவு மக்களுக்கு பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றை முன்னெடுப்பது ஆத்திரமூட்டும் செயல் மட்டுமின்றி அவமரியாதை செய்வதாகும் என ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நினைவேந்தல் நிகழ்வுகள் கண்டிப்பாக எந்த பாதிப்பும் இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை காசா போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரணி சீர்குலைக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுடன் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும். குறித்த நிகழ்வுகளில் பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த பிரதிந்திகள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில், காவல்துறைக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குமாறு பிரதமர் ரிஷி சுனக் உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மனை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை சீர்குலைக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை தலைவருக்கும் பிரதமர் ரிஷி சுனக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...