உலகம்செய்திகள்

அமெரிக்காவில் யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை

rtjy 288 scaled
Share

அமெரிக்காவில் யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகர அரசியல் செயற்பாட்டாளரும், ஐசக் அக்ரீ யூத ஜெப ஆலயத்தின் பொறுப்பாளருமான சமந்தா வோல் (40வயது) கொலை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் அமெரிக்கா முழுவதும் யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் குறித்த கொலை இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில்,

“கொலையில் பதிலில்லாத பல கேள்விகள் இருக்கின்றன. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். கிடைக்கும் அனைத்து உண்மைகளும் மதிப்பாய்வு செய்யப்படும் வரை எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பது முக்கியம்.

இறந்தவரின் உடலில் பல கத்திக் காயங்கள் இருக்கின்றன. குற்றம் நடந்ததாக நம்பப்படும் இடத்தில் இருந்த இரத்தத் தடயங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொலைக்கான நோக்கம் குறித்து அறிந்துகொள்ள FBI புலனாய்வு அதிகாரிகளிடம் உதவி கேட்டிருக்கிறோம்.

இறந்தவர் அமெரிக்க காங்கிரஸ் கட்சிக்காகவும், மிச்சிகன் அட்டர்னி ஜெனரல் டானா நெசெலின் பிரசாரத்திலும் பணியாற்றியிருக்கிறார். அதனால் மேலதிக தகவல்களுக்காக விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த 16ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோவுக்கு அருகில் இருக்கும் ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் இல்லினாய்ஸ் பகுதியைச் சேர்ந்த சுபுர்பன் என்ற யூதர், 6 வயது சிறுவனைக் கத்தியால் குத்திக் கொலைசெய்து, சிறுவனின் தாயையும் கத்தியால் தாக்கியதாகக் கைதுசெய்யப்பட்டது சர்வதேச அளவில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...