இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி
இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 7ம் திகதி ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், மோதல்கள் ஆரம்பானது முதல் முன்னரங்கப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் சேவையாற்றி வருகின்றனர்.
ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது முதல் இதுவரையில் குறைந்தபட்சம் 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் பலஸ்தீனியர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
11 பலஸ்தீன ஊடகவியலாளர்களும், மூன்று இஸ்ரேல் ஊடகவியலாளர்களும், ஒரு லெபனான் ஊடகவியலாளரும் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.
ஊடகவியலாளர்கள் பாரிய தியாகத்துடன் போர் பற்றிய சகல உண்மைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருவதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
Comments are closed.