உலகம்
உடனடியாக காசாவை விட்டு வெளியேறுங்கள்! இஸ்ரேல் எச்சரிக்கை
உடனடியாக காசாவை விட்டு வெளியேறுங்கள்! இஸ்ரேல் எச்சரிக்கை
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் காசா படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலிய ராக்கெட்டுகள் காசா நகரை முழுவதுமாக சிதைத்து வருகிறது.
இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் உருக்குலைந்து கிடக்கும் காசா நகரத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இஸ்ரேலிய தாக்குதலால் காசா நகரில் ஏற்பட்ட இந்த இடிபாடுகளை முழுவதுமாக அகற்றி முடிக்க ஒரு வருட காலமாவது தேவைப்படும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 1 மில்லியன் பாலஸ்தீன மக்களை 24 மணி நேரத்திற்குள் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலின் இந்த அறிவிப்பு மூலம், பாலஸ்தீன மக்கள் அதிக அடர்த்தியாக வசிக்கும் வடக்கு காசா நகரம் முதலில் தாக்கப்படும் என தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாக தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.