உலகம்
பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது
பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்திக்குத்து! அதிரடி கைது
பிரித்தானியாவில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் லூடன்(Luton) பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.
3 டீன் ஏஜ் சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதாக நேற்று இரவு 7 மணியளவில் Nunnery Lane பகுதிக்கு பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இந்த வன்முறை சம்பவத்தில் அடையாளம் கண்டறியப்படாத ஒரு சிறுவன் பல கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் கத்திக்குத்துக்கு ஆளான இரண்டு சிறுவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு சிறுவன் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் 16 வயது டீன் ஏஜ் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 டீன் ஏஜ் சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தை இரண்டு மைல் தொலைவில் உள்ள சண்டன் பார்க் சாலை மாலை 4 மணிக்கு நடைபெற்ற மற்றொரு கத்திக்குத்து சம்பவத்துடன் பொலிஸார் தொடர்பு படுத்துகின்றனர்.