Connect with us

இலங்கை

இலங்கையின் சிவப்பு பிடியாணைகளை மறுக்கும் சர்வதேச பொலிஸார்

Published

on

rtjy 33 scaled

இலங்கையின் சிவப்பு பிடியாணைகளை மறுக்கும் சர்வதேச பொலிஸார்

சர்வதேச பொலிஸார் தற்போது குற்றவாளிகளுக்கு சிவப்பு பிடியாணைகளை வழங்க மறுத்து வருவதாக குற்றவியல் மற்றும் சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கையில் வழங்கப்படும் தண்டனை மரண தண்டனை என்பதே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸ் ஆகியவை திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன் அழைக்கப்பட்ட போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த குற்றம் மற்றும் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட,

“பாதாள உலகத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பட்டியலை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களின் புகைப்படங்கள், வசிக்கும் இடங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

தற்போது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இருந்து 148 சிவப்பு பிடியாணைகளை பெற்றுள்ளோம். அவர்களில் சிலரை இலங்கைக்கு அழைத்து வர வாய்ப்பு கிடைத்தது.12 பேர் இந்தியாவில் சிறையில் உள்ளனர்.

பாதாளக்குழுக்கள் முழுமையாக வெளிநாட்டில் இருந்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பணத்திற்காக கொலை செய்யும் குழுவையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

அவர்களுக்கு உதவுவோர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . கடந்த காலங்களில் மோதல்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான பல வழக்குகள் உள்ளன. இது தொடர்பான கோப்புகள் அனைத்தும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிலரின் செயற்பட்டால் அதிகாரிகள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அவ்வாறான கொலைகளை நியாயப்படுத்த வேண்டும் என முயற்சிக்கின்றனர்.

ஒருவரைக் கைது செய்யப் போகும் போது, அவர் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடு செல்வது இப்போது எங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது.

சமீபத்தில், ஹந்தயா என்ற நபர் குற்றம் நடந்த 02 நாட்களுக்குள் துபாய்க்கு சென்றுள்ளார்.

இவ்வாறான குற்றவாளிகள் தொடர்பில் நாங்கள் சர்வதேச பொலிஸாரிடம் சிவப்பு பிடியாணை கேட்டால், அவர்கள் அதனை மறுக்கின்றனர்.

ஒரு சந்தேக நபரை உங்கள் நாட்டிற்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாங்கள் ஒருபோதும் கொண்டு வந்து ஒப்படைக்க மாட்டோம் என அழுத்தமாக தெரிவிக்கின்றனர்.

அதேபோல், நாங்கள் கோரிய 05 சிவப்பு அறிவிப்புகளை அவர்கள் நிராகரித்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

rtjy 62 rtjy 62
ஜோதிடம்18 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 23 சனிக் கிழமை, சந்திரன்...

tamilni 109 tamilni 109
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 08, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 22 வெள்ளி கிழமை, சந்திரன்...

rtjy 35 rtjy 35
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilni 81 tamilni 81
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 06, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 20 புதன் கிழமை, சந்திரன்...

rtjy 32 rtjy 32
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 05, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 19 செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

rtjy 19 rtjy 19
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 04.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 04.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 18 திங்கள் கிழமை, சந்திரன்...

tamilni 27 tamilni 27
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 03.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 03.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 03, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 17 ​ஞாயிற்று கிழமை, சந்திரன்...