உலகம்
கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?
கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?
காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, கனடாவுக்கு பயங்கரவாதத்தில் ஈடுபட அழைத்துச் செல்வதாக இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவுப் படையை உருவாக்க பயங்கரவாதிகள் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாக கூறுகிறது இந்திய உளவுத்துறை.
கனடாவுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களுக்காக ஸ்பான்சர் விசாக்கள் தயார் செய்யப்பட்டு, குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விடுகிறார்கள்.
மேலும், கனடாவில் சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் அங்கு படிப்பை முடித்து சரியான வேலை கிடைக்காமல் அங்கு தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் எளிதில் இவர்களின் வலைக்குள் விழுந்து விடுகிறார்கள் என்றும் இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் இந்த மனித கடத்தல் வேலையை செய்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளில் காலிஸ்தான் ஆதவு சக்திகள் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை கூறுகிறது.