rtjy 205 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா

Share

ஐ.நா நிபுணர்களை வியக்க வைத்த அசாத் மௌலானா

ஜெனிவாவில் சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது திடீரென நேரடியாக திரையில் தோன்றிய அசாத் மௌலானா, சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் தலைமையகத்தை கொண்டியங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைகள் சபையின் ஏற்பாட்டில் சனல் 4வின் ஆவணப்படம் திரையிடப்பட்ட போது திரையில் தோன்றிய அசாத் மௌலானா தாக்குதல் சம்பந்தமான பல்வேறு விடயங்களை எடுத்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் பல முக்கிய அரசியல் படுகொலைகளுக்குப் பொறுப்பாளிகள் குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் படுகொலைகள், ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, சிவராம் மற்றும் நடேசன் படுகொலைகள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் மற்றும் கார்ட்டூன் கலைஞர் பிரகோதாவின் காணாமல் போன சம்பவம் போன்றவை குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன், MI மற்றும் TMVP இணைந்து நடத்திய பல மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களும் என்னிடம் உள்ளன.

அவர்கள் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், என் உயிருக்கு பயந்து அவர்களிடமிருந்து என்னால் விலக முடியவில்லை. இலங்கை அதிகாரிகள் என்னைக் கடத்திச் செல்வார்கள், சிறையில் அடைப்பார்கள் அல்லது கொலை செய்வார்கள் என்று இன்று வரை நான் அஞ்சுகிறேன்.

எனது அச்சத்தை அதிகப்படுத்தும் வகையில், சனல் ஃபோரின் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டவுடன் பொலிஸார் எனது தாயையும் எனது சகோதரியையும் சந்தித்தனர். மேலும் எனது தொலைபேசி எண்ணையும் எனது முகவரியையும் கண்டறியும் முயற்சியில் இரண்டு தெரியாத நபர்கள் எனது சகோதரியின் மகனை விசாரணை செய்தனர்.

செப்டெம்பர் 5ஆம் திகதி பிரிட்டிஷ் சனல் 4 ஒளிபரப்பிய “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்” என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு கட்டுரைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன, மேலும் ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சில ஆதரவை உருவாக்கியுள்ளது, நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் எனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து அவர்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எனது அறிவின் காரணமாக, இலங்கை அரசாங்கத்தின் உளவுத்துறையால் நான் கடுமையாக அச்சுறுத்தப்பட்டேன். நான் எனது உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கோரி ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்றேன்.

இலங்கையில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசியல் படுகொலைகள் மற்றும் கடத்தல்களுக்குத் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியாக, இந்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சாட்சியமளிக்க நான் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், இலங்கையில் உள்ள அதிகாரிகளுக்கு உண்மையை வெளிப்படுத்துவதில் ஆர்வம் இருப்பதாக நான் நம்பவில்லை. எனவே சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் நேற்றைய தினம் (21.09.2023) இந்த ஆவணப்படம் ஒளிபரப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிபுணர்கள் மத்தியில் இந்த ஆவணப்படம் பெரும் அதிர்வலைகளையும் கேள்விகளையும் ஏற்படுத்தியிருந்ததாக தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து எழுந்த சந்தேகங்களும், கேள்விகளும் சனல் 4 இயக்குனர் மற்றும் ஆவணப்பட இயக்குனர்கள் இருவரிடமும் கேட்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் அசாத் மெளலானா திடீரென திரையில் தோன்றி எல்லோரையும் அதிர வைத்ததாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஐ. நாவின் விசாரணை அறிக்கையில் பத்து பேரின் பெயர்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான குழுவில் உள்ளவர்களும் இந்த படத்தை ஐ.நாவில் பார்வையிட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜெனீவாவில் ஐ.நாவின் 56ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இந்த நிலையில் சனல் 4 வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் அடங்கிய காணொளியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...