Connect with us

இலங்கை

சனல் 4 கயிற்றை இறுகப்பிடிப்போருக்கு அது மரணக் கயிறாக மாறும்

Published

on

tamilni 289 scaled

சனல் 4 கயிற்றை இறுகப்பிடிப்போருக்கு அது மரணக் கயிறாக மாறும்

சனல் 4 கயிற்றைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21.09.2023) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் இரத்தம் மற்றும் கண்ணீரை அரசியல் இலாபத்துக்காக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புலனாய்வுத்துறையை 2001 – 2004 காலத்தைப் போன்றும், 2015 காலத்தைப் போன்றும் வீழ்ச்சியடையச் செய்து இராணுவத்தினரைப் பலவீனமாவர்களாக்கி மீண்டும் நாட்டை இரத்த வெள்ளத்துக்குள் தள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது.

அரசைத் தாக்குவதாகக் கூறி எமது இராணுவத்தினரைத் தாக்குவதற்கு இடமளிக்க முடியாது.

எமது தாய்நாட்டுக்கு தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது. இதனால் சனல் 4 கயிற்றில் தொங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிராக மாறும் என்ற எச்சரிக்கையை நாங்கள் விடுகின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருபவர்கள் சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்காவின் விசாரணை அமைப்பு இங்கே வந்தது.

அவர்கள் இங்கே விசாரணை நடத்தி அறிக்கையை முன்வைத்துள்ளனர். ஏன் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கேட்கின்றோம்.

இதேவேளை, இந்தப் பிரச்சினைகளை மேற்குலக நாடுகளில் இருந்துகொண்டு இங்கே பிரிவினை வாதத்துக்கு முயற்சிப்பவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜோதிடம்

rtjy 62 rtjy 62
ஜோதிடம்18 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 09.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 23 சனிக் கிழமை, சந்திரன்...

tamilni 109 tamilni 109
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 08.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 08, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 22 வெள்ளி கிழமை, சந்திரன்...

rtjy 35 rtjy 35
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 07.12.2023 – Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

tamilni 81 tamilni 81
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 06.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 06, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 20 புதன் கிழமை, சந்திரன்...

rtjy 32 rtjy 32
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 05.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 05, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 19 செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

rtjy 19 rtjy 19
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 04.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 04.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 18 திங்கள் கிழமை, சந்திரன்...

tamilni 27 tamilni 27
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 03.12.2023 – Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 03.12.2023 – Today Rasi Palan இன்றைய ராசிபலன் டிசம்பர் 03, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 17 ​ஞாயிற்று கிழமை, சந்திரன்...