rtjy 206 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

Share

பிள்ளையானின் சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்

கடத்தல் மற்றும் கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி காரியாலயத்தில் நேற்று முன்தினம் (20.09.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பு சூத்திரதாரிகளை மிக தெளிவாக அடையாளப்படுத்தியதுடன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த சூத்திரதாரிகள் இந்த மண்ணிலே செய்த அட்டூழியங்கள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எனக்கூறி மக்கள் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் புலிகள் என்ற நாமத்தை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்துவந்த ஒரு சூத்திரதாரியே பிள்ளையான்.

அவருடன் நெருக்கமாக இருந்த ஆசாத் மௌலானா மூலம் அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதையடுத்து மக்கள் விழிப்படைந்துள்ளனர்.

எனவே இனியும் மக்கள் ஏமாறக்கூடாது. தமிழ் மக்கள் போராடிவந்த ஆயுத போராட்டத்தை கடந்த 13 வருடங்களாக இப்படிப்பட்டவர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து காட்டிகொடுத்து தமிழ் மக்கள் தாய், தந்தை அற்ற அனாதைகளாக காணப்படுவதற்கு காரணமான பிள்ளையான் போன்ற நபர்கள் இன்று ஆதாரங்களுடன் பிடிபட்டுள்ளனர்.

பிள்ளையான் விடுதலைப்புலிகளில் இருந்து பிரிவதற்கு முன்னர் அவரின் குடும்ப பின்னனி அந்த பகுதி மக்களுக்கு தெரியும்.அவருக்கு எந்தவிதமான சொத்துக்களும் இல்லை. ஆனால் அண்மையிலே வீடியோ மூலம் வாழைச்சேனையில் பரம்பரைக் காணி இருப்பதாகத்தெரிவித்துள்ளார்.

இதனை பார்க்கும்போது இவர் ஊழல், இலஞ்சம், கொலைகள், கொள்ளைகள், கடத்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.

எனவே இவ்வாறாக சேகரித்த அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே இவரால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென நீதி பிறப்பியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...