உலகம்

ரஷ்ய போர் விமான தொழிற்சாலைக்கு வடகொரிய ஜனாதிபதி திடீர் பயணம்!

Published

on

ரஷ்ய போர் விமான தொழிற்சாலைக்கு வடகொரிய ஜனாதிபதி திடீர் பயணம்!

ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன், அந்த நாட்டின் போர் விமான உற்பத்தி ஆலையை நேரில் பாா்வையிட்டுள்ளார்.

இது, தனிமைப்படுத்தப்பட்டு வரும் இரு நாடுகளுக்கும் இடையே தடை செய்யப்பட்ட ஒப்பந்தப் பரிமாற்றத்துக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து ரஷ்யாவின் கேபினட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொசோமோல்ஸ்க்-ஆன்-அமூா் நகரிலுள்ள போா் விமானத் தொழிற்சாலையை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் நேற்றுமுன்தினம் (17.09.2023) நேரில் பார்வையிட்டார்.

அவருடன், ரஷ்ய துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரொவும் அந்தத் தொழிற்சாலைக்குச் சென்றிருந்தார். ரஷ்யாவின் மிக முக்கியமான விமானத் தயாரிப்பு மையங்களில் ஒன்றை வட கொரிய ஜனாதிபதிக்கு காட்டப்பட்டுள்ளது.

அந்த ஆலையில், எஸ்யு-35 ரக சண்டை விமானமொன்றின் செயல் விளக்கம் கிம் ஜோங்-உன்-னுக்குக் காட்டப்பட்டது. இது தவிர, சுகோய் எஸ்ஜே-100 பயணிகள் விமானத் தயாரிப்பு ஆலையையும் கிம் ஜோங்-உன் பார்வையிட்டார்.

விமானத் தயாரிப்பு மற்றும் பிற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உணர்ந்து வருகிறோம்.

தொழில்நுட்ப தற்சாா்பு பெறுவதில் இரு நாடுகளுக்கும் இந்த ஒத்துழைப்பு கைகொடுக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கவும், அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களை ரஷ்யா அளிப்பதற்குமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Exit mobile version