புதிய புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் வீடுகளைக் கட்டுவது சாத்தியமேயில்லை: புதிய அறிவிப்பு
உலகம்செய்திகள்

மாணவர்களின் உண்மை நிலை

Share

மாணவர்களின் உண்மை நிலை

ஆண்டுக்கு இத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என ஒரு பக்கம் பெருமையடித்துக்கொள்கிறது கனடா.

அதை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்குச் செல்கிறார்கள். ஆனால், வரவேற்பதுடன் தனது வேலை முடிந்துவிடுகிறது என்பதுபோல இருக்கிறது கனடாவின் நடவடிக்கைகள்.

கனடாவில் இவ்வளவு சம்பளம் கிடைத்தால், நம் நாட்டுப் பணத்தில் இவ்வளவு வருகிறதே என்று கணக்குப்போட்டு ஆசையுடன் கனடாவுக்குச் சென்றால், அங்கு வீடு கிடைப்பதும் கஷ்டம், வீட்டு வாடகையும் எக்கச்சக்கம் என்பது தெரியவருகிறது.

இப்படி, வேலைக்குப் போன சிலர் ஏமாந்து போய் அமைதியாக நாடு திரும்பிவிட, படிக்கப்போகும் பிள்ளைகளுக்கு, அதுபோல படிப்பை பாதியில் விட்டுவிட்டு நாட்டுக்கு திரும்ப முடியாத ஒரு நிலை…

நேற்று வரை பள்ளியில் படித்துவிட்டு, கல்லூரிக் கனவுகளுடன் கனடா கனவுகளும் சேர்ந்துகொள்ள கனடாவுக்கு வந்தால், இங்கே தங்க இடம் பிடிப்பதற்குள்ளேயே பிள்ளைகளுக்குப் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. சொந்த நாட்டில் தம்மை நம்பி ஒரு குடும்பம் இருப்பதை எண்ணி, நாட்டுக்கும் திரும்ப முடியாமல், கனடாவிலும் சரியான உதவிகள் கிடைக்காமலும் திணறிக்கொண்டிருக்கிறார்கள் ஒரு கூட்டம் சர்வதேச மாணவர்கள்.

இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 24ஆம் திகதி கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வந்தார் கேஷவ் (Keshav Malhotra, 20). வந்த நாள் முதல் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார் அவர்.

இதுவரை 17,000 அடிகள் நடந்துவிட்டேன், இதுவரை தங்குவதற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கவில்லை என்கிறார் கேஷவ். நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஆனால், வீட்டைப் போய் பார்த்தால் விளம்பரத்தில் காட்டப்பட்டதற்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அதேபோல, ஒரு குளியலறை கொண்ட ஒரு குடியிருப்பில் எட்டுபேர் வரை தங்கினாலும், அதற்கும் எக்கச்சக்க வாடகை கேட்கப்படுகிறது என்கிறார் அவர்.

ஏற்கனவே, கனடா கல்லூரிகள் பல சர்வதேச மாணவர்களின் கல்விக்கட்டணத்தை நம்பித்தான் இயங்குவதாகக் கூறப்படுகிறது. இப்போது, வீட்டு உரிமையாளர்களும் இந்த மாணவர்களை நம்பி வருவாய் பார்க்க முடிவுசெய்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்கள் முன் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார் அவர். அதற்கு அவர் எடுத்துள்ள ஆயுதம், சர்வதேச மாணவர்களைக் கட்டுப்படுத்துவது.

அதாவது, சர்வதேச மாணவர்கள் கனடாவுக்கு படிக்க வருகிறார்கள். அவர்கள் கனடாவில் செட்டில் ஆனதும், அவர்களை நம்பி அவர்களுடைய குடும்பத்தினர் கனடாவுக்கு வருகிறார்கள். ஆக, ஒரு மாணவரை நம்பி இத்தனை பேர் வருகிறார்களே என கணக்குப் போட ஆரம்பித்துவிட்டது கனடா.

ஆக, சர்வதேச மாணவர்களால் தான் கனடாவில் வீடுகளுக்குத் தட்டுப்பாடு என்று கூறி, மாணவர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது கனடா.

அப்புறம் எதற்கு ஜம்பமாக, நாங்கள் ஆண்டுக்கு இத்தனை புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என பெருமையடித்துக்கொள்ளவேண்டும்?

கனடாவுக்கு, வேலை செய்ய ஆட்கள் தேவை. ஆனால், படித்துமுடித்து வேலைக்கு செல்லும் சர்வதேச மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவந்தால் மட்டும் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது!

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...