உலகம்
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர்!
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர்!
மனைவியுடன் வாழ சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஃபைஸ். இவர் துபாயில் உள்ள ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே போல், இந்திய மாநிலம் தெலங்கானா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நேஹா.
இதில், ஃபைஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு நேஹாவைச் சந்தித்தார். பின்னர், நேஹாவுக்கு துபாயில் வேலை வாங்கி கொடுக்க ஃபைஸ் உதவி செய்தார்.
இதனைத்தொடர்ந்து, ஃபைஸ் மற்றும் நேஹா காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, நேஹா துபாயில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதன்பின், ஃபைஸ் இந்தியாவுக்கு வருவதற்கு நேஹா பெற்றோரான ஷேக் ஜுபைர் மற்றும் அப்சல் பேகம் ஆகியோர் போலி சான்றிதழ் பெறுவதற்கு ஏற்பாடு செய்தனர்.
இதற்கு, மாதப்பூரில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று ஃபைஸை முகமது கவுஸ் என்று பெயர் மாற்றியும், தங்களது மகன் என்று கூறியும் நேஹாவின் பெற்றோர் பதிவு செய்தனர். இதன்மூலம், போலிச்சான்றிதழ் பெற்ற ஃபைஸ் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார்.
இதனையறிந்த பொலிசார், பகதூர்புராவில் உள்ள ஆசாத் பாபா நகரில் உள்ள மாமியார் வீட்டில் இருந்த ஃபைஸை கைது செய்தனர். இதில், நேஹாவின் பெற்றோர் தலைமறைவாகினர்.
மேலும், ஃபைஸிடமிருந்து பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்களை பறிமுதல் செய்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்