சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!
உலகம்செய்திகள்

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

Share

சுவிஸ் ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த இளைஞர்களை விடுவித்த உச்ச நீதிமன்றம்!

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்த சமூக ஆர்வலர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ள ஆச்சரிய சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்துள்ளது.

ராணுவ சேவையை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததற்காக அபராதம்
2020ஆம் ஆண்டு, இளைஞர்களான மூன்று சமூக ஆர்வலர்கள், ராணுவ சேவையை புறக்கணிக்குமாறும், கட்டாய ராணுவ சேவை செய்யாத இளைஞர்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியையும் புறக்கணிக்குமாறும் அழைப்பு விடுத்தார்கள்.

அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், ஜூலை, அதாவது கடந்த மாதம் 27ஆம் திகதி, உச்ச நீதிமன்றம், அந்த இளைஞர்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளதுடன், அவர்கள் செலவிட்ட தொகையை ஃபெடரல் அரசு திருப்பிக் கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுடைய செயல்கள் சட்டத்துக்கு விரோதமானவை என்றும், கோவிட் காலகட்டத்தில் ராணுவம் மக்களைக் காக்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், நாட்டின் பாதுகாப்பை அபாயத்துக்குள்ளாக்கும் விதத்தில் அவர்களுடைய நடவடிக்கைகள் அமைந்திருந்ததாகவும் அவர்கள் மீது முன்பு குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பாணைய நீதிபதியோ, முந்தைய தீர்ப்பு, மக்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்கும் அரசியல் சாசன உரிமைக்கு முரணானது என்று கூறி அவர்களை விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...