நடுவானில் இயந்திரக் கோளாறு!!  கடலில் இறக்கிய விமானம்
சினிமாசெய்திகள்

நடுவானில் இயந்திரக் கோளாறு!!  கடலில் இறக்கிய விமானம்

Share

நடுவானில் இயந்திரக் கோளாறு!!  கடலில் இறக்கிய விமானம்

விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தைக் கடலில் இறக்கினார் விமானி.

பிரான்சில் சுற்றுலாப்பயணிகள் சிலருடன் சிறிய ரக விமானம் ஒன்று பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென அதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக விமானத்தை தரையிறக்கவேண்டிய நிலை ஏற்பட, Frejus என்ற நகரத்தின் அருகே கடலில் விமானத்தை இறக்கியுள்ளார் விமானி.

விமானத்தில் பயணித்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பயத்தில் உறைந்துபோயிருக்க, அவர்களை தீயணைப்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளார்கள். ஆனால், அந்த விமானம் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

இப்படி விமானத்தைக் கடலில் இறக்கவேண்டுமானால், விமானிக்கு எக்கச்சக்க தொழில்நுட்ப அறிவும், கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும் என்கிறார்கள் தீயணைப்புக் குழுவினர்.

அந்தக் கடற்கரையில் ஏற்கனவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இருந்ததாலேயே, கடற்கரையைத் தவிர்த்து, கடலில் விமானத்தை இறக்கியுள்ளார் அந்த விமானி. ஆனால், அந்த சுற்றுலாப்பயணிகள்தான் பாவம். பயத்தில் நடுநடுங்கிப்போயிருந்தார்களாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...